யாழ்ப்பாணத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று தொடர்பில் இன்றைய பரிசோதனையில் இரு இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 8 பேரில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று 24 பேருக்கான கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
14 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.
ஒருவர் இவர்களுக்கு உணவு வழங்கியவர்.
ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்.
8 பேர் முழங்காவில் பகுதி கடற்படை முகாமில் நாட்டின் வேறு பகுதியை சேர்ந்தவர்கள். தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.
இதேவேளை, அரியாலை பகுதியில் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
அவர்கள் அனைவரிலும் முதல் கட்டமாக ஏப்ரல் 1, ஏப்ரல் 3 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM