நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அடுத்த வாரத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி ,கர்ப்பிணி பெண்களுக்கான திரிபோஷா குழந்தைகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான திரிபோஷா, விட்டமின் வகைளையும் வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கான வேலைத்திட்டம் குறித்தும் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் பிரச்சினைகள் இருப்பின் 072 280 95 77 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.