(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்தலை நடத்துவதற்கான புதிய தினத்தை தீர்மானித்தல் உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் நேரம் கோரியுள்ளது.

இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இன்று கடிதமொன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது :

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதன் காரணமாக சமூகத்திற்கு ஏற்படும் அபாயம் மற்றும் அதனை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்பவற்றின் காரணமாக பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாட தேசிய மக்கள் சக்தி எதிர்பார்க்கிறது.

தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களின் பற்றி ஆராய்வதற்காக தேசிய மக்கள் சக்திக்கு விரைவில் தினமொன்றைத் தருமாறு கோருகின்றோம்.