வட கொரியா செவ்வாய்க்கிழமை நாட்டின் கிழக்கு கடற்பகுதியில் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக தென் கொரிய இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா தரையிலிருந்தும், பேர் விமானங்களின் மூலமாக ஆகாயத்திலிருந்தும் ஏவிப் பரிசோதித்துள்ளது.

வட கொரியாவின் கிழக்கு கடலோர நகரமான காங்வோன் மாகாணத்தில் உள்ள மஞ்சோனை மையமாகக் கொண்ட வட கொரிய படையினர் செவ்வாய்க்கிழமை காலை பல வான் மற்றும் தரை வழியாக இவ்வாறு ஏவிப் பரிசோதித்துள்ளனர்.

இந்த ஏவுகணைகள் வடக்கின் கிழக்கு கடற்கரையில் இருந்து 150 கிலோமீற்றர் (93 மைல்) தொலைவில் பறந்து சென்றதாக தென் கொரியாவின் கூட்டுத் தலைவர்கள் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

‍அதேநேரம் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் அச்சத்துக்கு மத்தியில் வட கொரியா இவ்வாறான தொடர்ச்சியான ஆயுத சோதனைகளை முன்னெடுத்து வருவதாகவும் தென் கொரியா கவலை தெரிவித்துள்ளது.

Photo Credit : ‍nbc news