இலங்கையில் சிக்கித்தவிக்கும் 300 க்கும் மேற்பட்ட தமிழக வர்த்தகர்கள் !

Published By: Vishnu

14 Apr, 2020 | 05:03 PM
image

வர்த்தக நோக்கத்தோடு இலங்கைக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட புடவை வர்த்தகர்கள் கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் சிக்கியுள்ளதாக இந்தியாவின் 'த இந்து' செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் மாதம் நடைபெற்ற கச்சதீவு தேவாலய திருவிழாவின்போது தமிழகத்தின் சின்னலபட்டி, நீலகோட்டை, குண்டலபட்டி, அனாய்பட்டி உள்ளிட்ட பகுதிளைச் சேர்ந்த புடவை வணிகர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

இவ்வாறு இலங்கை வந்த தமிழக வணிகர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இரண்டு மாத காலமளவில் தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது நாட்டில் சிக்கியுள்ள தமிழக வணிகர் ஒருவர் இவ்வாறு தெரிவித்ததாக த இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந் நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக வெளிநாட்டு பயணத் தடைகள்  விதிக்கப்பட்டுள்ளமையினால் அவர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாது சிக்கித் தவிக்கின்றனர்.

இதனிடையே விருது நகரிலிருந்து வருகை தந்த வர்த்தகர்கள் குழுவொன்று இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் உதவியை நாடியுள்ளமையினால் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில், உதவி கோரிய விருதுநகரில் இருந்து வருகை தந்துள்ள  வர்த்தகர்கள் குழு ஒன்றுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறான வர்த்தகர்களுக்கு உதவுவதாற்கான நடவடிக்கையையும் உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுத்துள்ளது.

இலங்கையின் சிறந்த சுற்றுலா மூல சந்தைகளில் இந்தியாவும் ஒன்று, கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் இந்தியாவிலிருந்து 35,309 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04