கனடா, ஐக்கிய இராஜ்ஜிம், அவுஸ்திரேலியா, ஜேர்மனி ஆகிய நாடுகளில் செயற்பட்டு வரும் வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கங்கள் ஒன்றிணைந்து வல்வெட்டித்துறையில் மக்களுக்கான ஊரடங்கு சட்டகால உலர் உணவு விநியோகத்தினை ஆரம்பித்துள்ளன.

வல்வெட்டித்துறை J-388, J-389, J-390, J-391, J-392, J-393 ஆகிய  கிராம அலுவலர் பிரிவுகளில் அவசர உதவி தேவைப்படுகின்ற மக்களுக்காக இந்த உலர் உணவு விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது. 

அதனடிப்படையில்  முதற்கட்டமாக J-391 பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான உலர்உணவு விநியோகம் 13 ஆம் திகதி ஏப்பரல் மாதம் 2020 அன்று  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக ஏனைய கிராமசேவையாளர் பிரிவுகளுக்கும் உலர்உணவு விநியோகம்  இடம்பெறவுள்ளன. இந்த உதவித் திட்டத்தில் ஆறு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 695 குடும்பங்கள் பயன்பெறவுள்ளனர்.

வல்வை மக்களுக்கான இந்த அவசரகால உதவி பணியில் இணைந்துகொண்டிருந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நான்கு சங்கங்களும் கூட்டிணைந்து நன்றிகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.