உலகையே உலுக்கிவரும் கொரோனா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உட்பட பல பலம்பொருந்திய நாடுகளை நிலைகுலையச்செய்துள்ளதோடு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டுள்ளது. 

அந்தவகையில் இதுவரையிலும், அமெரிக்காவில் 23,640, பேரும் இத்தாலியில் 20,465, இங்கிலாந்தில் 11,329 பேரும் பிரான்ஸில் 14,967 பேரும் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

மேலும் கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கி,  இதுவரை உலக அளவில் மொத்தம் 19,24,314 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மொத்தம் 1,19,655 பேர் உயிரிழந்திருப்பதானது, உலக நாடுகளை நிலைக்குலைய செய்திருக்கிறதுடன் பொருளாதாரக் கட்டங்களையும் சீர்குலைத்துள்ளது.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளாகி, 1,535 பேர் பலியாகி உள்ளதோடு, அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23,640 ஆக அதிகரித்துள்ளது. 

அமெரிக்காவுக்கு அடுத்ததாக இத்தாலியிலேயே உயிரிழப்பு அதிகம். இத்தாலியில் மொத்தம் 20,465 பேர் கொரோனா நோயால் மரணித்துள்ளதுடன், ஸ்பெயினில் 17,756 பேரும் பிரான்ஸில் 14,967 பேரும் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர்.

மேலும், இங்கிலாந்தில் இதுவரை மொத்தம் 11,329 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதுடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88,621 ஆகும்.

கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருந்த சீனாவில் உயிரிழப்பு எண்ணிக்கை மொத்தம் 3,341 ஆக உள்ளது.

ஈரானில் 4,585, பெல்ஜியத்தில் 3,903 , நெதர்லாந்தில் 2,823 பேர் கொரோனாவுக்கு இரையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், அமெரிக்காவில்தான் மிக அதிக அளவு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.  இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 431 பேர் உயிரிழந்த நிலையில் அந்நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 19,899 ஆக அதிகரித்தது.

இங்கிலாந்தில் ஒரே நாளில் 737 பேர் நேற்று மரணமடைந்தனர். அங்கு மொத்தம் பலியானோர் எண்ணிக்கை11,329 ஸ்பெயினில் ஒரே நாளில் 603 பேர் மரணமடைந்ததால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 17,209 ஆக அதிகரித்தது.

பிரான்ஸில் ஒரே நாளில் 561 பேர் பலியாகினர். அங்கு மொத்தம் 14,393 பேர் உயிரிழந்தனர். ஜெர்மனியில் ஒரே நாளில் 151 பேர் பலியானதால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,022 ஆகவும், பெல்ஜியத்தில் 254 பேர் நேற்று பலியாகினர். அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 3,600 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், ஈரானில் 4,474 பேரும், ஜெர்மனியில் 3,022 பேரும்,பெல்ஜியத்தில் 3,600 பேரும் கொரோனா தொற்று நோயால் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.