பேருவளை, பன்வில மற்றும் சீனக்கொரோட்டுவ கிராமம் ஆகியவை முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த பகுதிகளில் கொரோனா அச்சம் நிலவுவதால் இவ்வாறு முடக்கப்படுவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நேற்றையதினம் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக 14 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
புதிதாக அடையாளம் காணப்பட்ட அனைவரும் மட்டக்களப்பு, புனாணையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் களுத்துறை மாவட்டம் - பேருவளை பகுதியில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக அங்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்திருந்தது.
பேருவளையில் இருந்து புனாணை தனிமைப்படுத்தல் முகாமுக்கு 219 பேர் அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையிலேயே அந்த பரிசோதனைகளின் முடிவுகளின் படி தற்போது அங்கு கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து பேருவளை பகுதியில் உள்ள பன்வில மற்றும் சீனக்கொரோட்டுவ கிராமம் ஆகியவற்றை முற்றாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM