கண்ணுக்கு புலப்படாத எதிரியால் நன்மையும் பயக்குமா?

By Priyatharshan

13 Apr, 2020 | 09:03 PM
image

உலகம் முழுவதையும் இன்று கொரோனா வைரசு பயமுறுத்திக் கொண்டும் மனித உயிர்களை காவுகொண்டவாறுமுள்ளது. இன, மத, மொழி பேதமின்றி மனிதகுலம் முழுவதற்கும் அச்சுறுத்தலாக இருப்பதோடு, மனித அறிவு, தொழில்நுட்பம், விஞ்ஞானம் அனைத்திற்கும் சவாலாகவிருந்து உலகம் உனக்கு மட்டும் சொந்தமல்லவென பறைசாற்றுகிறது.

இது சமூக அக்கறையுள்ள மனிதமனங்களைத் தொடுவதை அவதானிக்க முடிகிறது. இந்த கண்ணுக்குத்தெரியாத எதிரியுடன் ஆடுகளத்தில் நேரடியாக மோதுவது நிராயுதபாணியாக நிற்கின்ற மக்களும் தம்மிடமுள்ள குறைந்த வளங்களை வைத்துக்கொண்டு மக்களுக்கு போதிய சிகிச்சையளிக்க முடியாது திண்டாடும் மருத்துவமனங்களும் தான். மேற்கத்தைய அரசகட்டமைப்புக்களோ முதலாளிய வர்க்கநலன்களைகாக்க தாம் பல தசாப்தங்களாக செய்துவந்த திருகுதாளங்களால் மக்களைக் காக்கவேண்டிய சுகாதாரக்கட்டமைப்புக்கள் நலிவுற்று தள்ளாடுவதை மூடிமறைக்க நிவாரணங்களை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிவித்துவருகிறார்கள். இந்நிவாரணங்கள் கூட முதலீட்டாளர்களை தொடர்ந்தும் வாழவைக்க அள்ளிக்கொடுப்பதும் வருமானங்களையிழந்தும் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களுக்கு கிள்ளித் தெளிப்பதுமாகவேயுள்ளது. இது அரசு என்பது வர்க்கநலன் காக்க நிறுவப்பட்ட இயந்திரம் என்பதை இச் சூழலில் வெள்ளிடர்மலையாய் காட்டிநிற்கின்றது. இன்னும் ஒருபடி மேலே சென்று அமெரிக்க அதிபர், இந்தியக்குடியரசுத்தலைவர் போன்றோர் தமது செயல்களாலும், சொல்லாடல்களாலும் சுயரூபத்தை தோலுரித்துக் காட்டியுள்ளனர். 

இவ்வாறு தமக்குள்ளே அடிபட்டு அரச நிவாரணங்களை ஒருபுறமாக கவ்விக்கொள்ளும் முதலாளிகள் மறுபுறமாக கொம்பனிகள் மூடியுள்ளதை காரணங்காட்டி தொழிலாளர்களை வேலைகளில் இருந்து நிறுத்துகின்றனர். இவ்வாறான சூழலில் வைத்தியசாலைகளில் மல்லுக்கட்டி சோர்விலும் விரக்தியிலுமுள்ள மனிதநேயங்கொண்ட மருத்துவமனங்கள் நிஜங்களைப் பேசத் தொடங்குகின்றன. நோர்வேயில் ஆரம்பிக்கப்பட்டுவிட்ட இதுபற்றிய விவாதத்தில் ஒரு மருத்துவத்துறைப் பேராசிரியர் பகிர்ந்துகொண்ட முக்கியமான சில குறிப்புக்களை பார்ப்பதற்கு முன்பு நோர்வேபற்றிய சிறு விளக்கம் இவ் விவாதத்தையும் கருப்பொருளையும் புரிந்து கொள்ள உதவுமென எண்ணுகின்றேன்.

உலகிலே வாழுவதற்கு மிகச்சிறந்த நாடு என வருடாந்தம் நிகழ்த்தப்படும் சர்வதேச கணிப்பில் முதலாவது அல்லது இரண்டாவது இடத்தை கடந்த சிலவருடங்ஙளாக நோர்வே தட்டிச்சென்று வருகின்றது. அதாவது

- நோர்வேவாழ் மக்களுடைய வாழ்க்கைத்தரம் அவ்வளவு உயர்வாகவுள்ளது.

- இங்கு தனியார் மருத்துவமனைகள் மிக மிக குறைவு.

- மருத்துவசேவை இலவசம் எனச்சொல்லக்கூடியளவு செலவு குறைவானது.

- மருத்துவக் காப்புறுதித் திட்டங்கள் உள்ளபோதும் சாதாரண குடிமகன் அதில்

தங்கியிருக்கத் தேவையில்லை.

- மீன்பிடி, கப்பல்கட்டுமானத்துறை என்பன பாரம்பரிய தேசிய வருமானமீட்டும்

துறைகளாக இருந்தபோதும் 1970 ற்கு பிற்பட்டகாலப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட

எண்ணைவளம் நோர்வேயை ஒரு செல்வம் கொளிக்கும் நாடாக மாற்றியுள்ளது.

- எண்ணை விற்பனையிலீட்டப்படும் இலாபம் சேமிப்பாக வைப்பிலிடப்படுகின்றது. இந்த

சேமிப்புப் பெட்டகத்திலிருந்து ஒரு குறைந்த தொகையே இப்போது நிவாரணம்

வழங்கப்பயன்படுத்தப்படுகின்றது. (இப்படியான பெட்டகம் இல்லாத நாடுகள் இந்த

நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்கின்ற போகின்றன என்பது பெரிய சவாலே)

இப்போது நோர்வேயிய மருத்துவத்துறை பேராசிரியர் சிவென் எறிக் கிஸ்வோல்ட் இனுடைய

கருத்துக்களை பார்ப்போம்.

1. எங்கள் வைத்தியசாலைகளில் போதியளவு கட்டில்கள் இல்லை. 1980 களிலிருந்து

இன்றுவரையான காலப்பகுதியில் நோர்வேயிலுள்ள வைத்தியசாலைகளிலுள்ள

கட்டில்களின் எண்ணிக்கை அரைவாசியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதே காலப்பகுதியில்

நோர்வேயினுடைய சனத்தொகை 1ரூபவ்3 மில்லியன்களால் அதிகரித்துள்ளது என்பது

கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும். புதிதாகக் கட்டப்பட்ட வைத்தியசாலைகளில்

கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு துறைசார்வல்லுனர்கள் பரிந்துரைத்த

போதும் அவை அதிகரிக்கப்படவில்லை.

2012 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளிலுள்ள சனத்தொகைக்கு ஏற்ப வைத்தியசாலைகளிலுள்ள

கட்டில்களின் எண்ணிக்கை கணிக்கப்பட்டு ஒரு ஆய்வுக்கட்டுரையாக வெளியிடப்பட்டது.

அக்கணிப்பின்படி ஜேர்மெனி தமது மக்களுக்குத் தேவையான கட்டில்களை கொண்ட

வைத்தியசாலைகளையுடைய நாடாக முதலிடத்தை பிடித்துக் கொண்டது. போர்த்துக்கல் தமது மக்களுக்குத் தேவையான கட்டில்களிலும் மிகக் குறைவான கட்டில்களைக் கொண்ட நாடாக இறுதியிடத்தைப் பிடித்துக் கொண்டது. இந்தப் பட்டியலின் இறுதியில் தான் நோர்வே சுவீடன் போன்ற நாடுகளும் இடம்பிடித்தன.

வைத்தியசாலைகளில் இடப்பற்றாக் குறையால் ஏற்படும் விளைவுகள் 

- நோயாளர்கள் பூரணகுணமடையும் முன்பே வீட்டிற்கு அனுப்பப்படல்.

- வயோதிபர்கள் இரவு வேளைகளிலும்ரூபவ் சிலசமயங்களில் நள்ளிரவில் கூட வீடுகளுக்கு

அனுப்பப்படல்.

- பூரணகுணமடையும் முன்பே வீட்டிற்கு அனுப்பப்படும் நோயாளர்கள்களின்

இறப்புவீதம் பூரணகுணமடைந்து வீடு செல்பவர்களினதும் பார்க்க அதிகம் என

ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

- புதிய நோயாளர்களை ஏற்பதற்கு ஏதுவாக 20 மூ மான கட்டில்கள் வெற்றிடமாக இருக்க

வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ள போதும் நோர்வேயிய வைத்தியசாலைகளில் 95 -

100 வீதம் கட்டில்கள் எப்போதும் நிரம்பியே உள்ளன.

2. எங்கள் வைத்தியசாலை மருந்துக்களஞ்சியங்களில் 3 வாரங்களுக்குத் தேவையான

மருந்துகளே கையிருப்பில் உள்ளன.

3. எங்கள் வைத்தியசாலைகளில் தொற்றுநோயிலிருந்து எம்மை பாதுகாக்க அணிய

வேண்டிய உடைகளோரூபவ் உபகரணங்களோ போதியளவு இல்லை.

உலகிலே வாழ்வதற்கு மிகவுகந்த நாடாக பட்டியலிடப்பட்ட நோர்வே நாட்டிலே கொரோனா

தொற்றுநோய் தாக்கத்தின் பிரதிபலிப்பாக விழித்துக் கொண்டவர்களிடமிருந்து

எழுந்துள்ள விவாதத்தின் சில கருப்பொருட்கள் இவை. இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல விடயங்கள்

மேற்குலகம் முழுவதற்கும் பொதுவானவையே. இவற்றின் பின்னணியை ஒவ்வொன்றாக

நோக்குவோம்

1. மருத்துவமனைகளில் போதிய கட்டில்கள் இல்லாமை: ஒரு மருத்துவமனையில் பிரதான

பாத்திரங்கள் நோயாளரும், மருத்துவ ஊழியர்களுமே. ஆனால் இந்த நிலை கடந்த

தசாப்தங்களில் மாற்றமடைந்து மருத்துவமனைகள் விலையுயர்ந்த மருந்துகளுக்கும் மருத்துவ

உபகரணங்களுக்குமான சந்தையாக மாற்றமடைந்து வந்துள்ளது. மருத்துவமனை நிர்வாகங்களோ வரையறுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் சந்தையில் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் அதேவேளை நோயாளர்களுக்கு சரியானதும் பாதுகாப்பானதுமான சிகிச்சையளிக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டன. இந்த நிர்ப்பந்தங்களுக்கு கட்டுப்படாத நிர்வாகிகள் தூக்கிவீசப்பட்டு புதியவர்களால் மாற்றீடு செய்யப்பட்டுவந்துள்ளனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. கல்வியாளர்களுக்கிடையில் காலங்காலமாய் நிலவிவருகின்ற போட்டியும் பதவி மோகமும் இந்தச் செயற்பாடுகளை மிகவும் இலகுவாக்கிவந்துள்ளன என்றால் மிகையாகாது. புதிய உபகரணங்களும் புதிய சிகிச்சை முறைகளும் சந்தைக் கொள்வனவுக்கும் நோயாளர் பராமரிப்புக்குமிடையிலான சமநிலையைப் பேண சிறிதளவு உதவிவந்துள்ள போதும் அதையும் மீறிய செலவுகளை சமாளிக்க முடியாத நிர்வாகங்கள் மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதையும் நோயாளர்படுக்கைகளை குறைப்பதையும் ஆயுதங்களாக கையிலெடுத்தன. அதிக செலவீனங்களை தரக்கூடிய அதிதீவிர சிகிச்சைப்பிரிவு போன்றவை முதலில் இதற்குப் பலியாகிப் போனதில் ஆச்சரியமேதுமில்லை. அறைகள் நிரம்பிவழியத் தொடங்கியதால் நோயாளர்கள் தமது படுக்கைகளுடன் தாழ்வாரத்துக்கு கொண்டுவரப்பட்டனர். -90 களில் நோர்வேயிய வைத்தியசாலைகளில் இது நாளாந்த காட்சிகளாக விரிந்துகிடந்தது. இதனால் சமூகத்தில் ஏற்பட்ட எதிர்ப்பையும்ரூபவ் வெறுப்பையும் சமாளிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட வைத்தியசாலை நிர்வாகங்கள் ஓரளவு குணமடைந்த நோயாளர்களை வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றுவதன் மூலம் அந்த சுமையை வேறொரு கட்டமைப்பின் தலையில் கட்டிவிடும் உத்தியைக் கையாண்டதன் மூலம் இதிலிருந்து தப்பித்துக் கொண்டன. இவ்வாறு மருத்துவமனைகளின் தொழிற்பாட்டையே கேள்விக்குள்ளாக்கிய சமூகங்கள் இன்று இவ்வாறான நெருக்கடியை எதிர்நோக்குவது ஆச்சரியத்திற்குரியதல்ல.

2. உலகமயமாக்கத்தின் விளைவாக அல்லது உலகமயமாக்க நோக்கத்தின் பெறுபேறாக பல்தேசிய கொம்பனிகள் தமது உபரிவருமானத்தை மேலும் கூட்டிக்கொள்ளும் பேராசையுடன் தமது மூலதனத்தை இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு நகர்த்தி ஏழைத்தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் உற்பத்திச்செலவைக் குறைத்து உபரிப்பெறுமதியை உயர்த்தி கொள்ளை இலாபம் அடித்துவந்தனர். இதற்கு மருத்துவத்துறையும் விதிவிலக்காக இருக்கவில்லை. கொரோனா அனர்த்தத்தினால் முடங்கிப்போன உற்பத்தியும் போக்குவரத்தும் காரணமாக அத்தியவசிய மருந்து வகைகள்கூட ஒரு சில வாரங்களுக்கே கையிருப்பிலுள்ளதாக செய்திகள் கசிந்தபோது மருத்துவத்துறையே ஆடிப்போய் விட்டது. எவ்வித முன்கூட்டிய நெருக்கடிகால மதிப்பீடுகளுமின்றி தூங்கிக் கொண்டிருந்த பொறுப்புக்கூற வேண்டியவர்களிடம் மக்களை இருப்பிடங்களில் முடக்குவதை தவிர வேறெந்தத் தெரிவும் இருக்கவில்லை. இதற்கு பொலீசும் இராணுவமும் களமிறக்கப்பட்டதும் இது பொதுமக்களுடைய தவறு போல் சித்தரிக்கப்பட்டதும் இங்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியந்திரங்களின் வகிபாகத்தை கேள்விக்குள்ளாக்குகின்றது.

3. மருந்துவகைகள் மட்டுமன்றி சாதாரணமாக நாளாந்த பாவனைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் கூட கையிருப்பில் இருக்கவில்லை. இத்தாலிரூபவ் பிரான்சு போன்ற நாடுகளில் பல வைத்தியர்களும்ரூபவ் தாதிகளும் இதற்கு தமது உயிர்களை விலையாகக் கொடுத்துள்ளார்கள். தேவையானவர்களுக்கு சையற்கைச் சுவாசம் வளங்கமுடியாமல் நோயாளரின் உயிர்பிரிந்து செல்வதை கையாலாகாத்தனத்துடன் பார்த்து துவண்டுபோன மருத்துவமனங்கள் ஏராளம். மக்களை ஏமாற்ற தேசிய ஒருமைப்பாட்டுச் சாயமிடப்பட்டு செயற்கைச் சுவாசம் வளங்கும் கருவி ஒன்று நோர்வே பிரதமரால் பீடிகைகளுடன் தொலைக் காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு சில மணிநேரத்திலேயே வெகுண்டெழுந்த தாதியர் தொழிற்சங்கம் மக்களுக்கு காட்டப்பட்ட ஏமாற்று வித்தையை தவிடு பொடியாக தகர்த்து பிரதமரின் முகத்திரையை கிழித்தது.

இன்று உலகமக்கள் அனைவரினதும் அனுதாபத்தையும் அன்பையும் புரிதலையும் பெற்றுள்ளவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றிவரும் மருத்துவத்துறையினரே. கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து மக்களுடைய நலன்களையும்ரூபவ் சமூகவிழிப்புணர்வையும் முன்நிறுத்தி தொடர்ந்தும் போராட வேண்டிய பாரிய சமூகப் பொறுப்பு மருத்துவத்துறையினரிடம் உண்டு. கடினமான தொழிற்சங்கப் போராட்டங்களினூடாக பெறமுடியாது போகும் சுகாதாரதுறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வை எவ்வித முன்நிபந்தனைகளுமின்றி நோர்வே அரசு இரு தினங்களுக்கு முன்பு திடீரென அறிவித்தது.

இந்த உத்தி ஏனைய நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இங்கு நடடிக்கை என்னவென்றால் வைத்தியசாலைகளில் உயிரைப்பணயம் வைத்து பணிபுரிந்துவரும் துப்பரவுத் தொழிலாளர்களுக்கு எவ்வித சம்பள உயர்வும் அறிவிக்கப்படவில்லை. இவர்களுடைய குரல்கள் தங்களுடைய இருப்பை அசைத்துவிடப்போவதில்லையென அரசு நம்புகிறது போலும்.

நிலமைகளை விளங்கிக்கொண்ட அரசு மருத்துவத்துறையின் வாய்களை அடைக்க பயன்படுத்தும் உத்தி இதுவென்பதைவிட வேறென்ன விளக்கம் தேவை?

கொடுக்கப்பட்ட உயிர்த்தியாகங்களும்ரூபவ் அர்ப்பணிப்பான சேவையும் வெறுமனே தொழிற்சங்க பேரம்பேசலுகளுக்குள் முடக்கப்பட்டு விடாமல் மானுடம் நோக்கி திருப்பப்படவேண்டும்.

Dr. ச. லிமலநாதன் MD PhD

( இதயமருத்துவ நிபுணர் - ஒஸ்லோ, நோர்வே )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right