யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மணற்காட்டு கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த படகிலிருந்து 137 கிலோ கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் மூவரை கைது செய்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை மணற்காடு கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று சென்று கொண்டிருப்பதாக கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த படகு மறிக்கப்பட்டுள்ளது. படகில் இருந்து 137 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் படகில் பயணித்த மூவர் சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.