(இராஜதுரை ஹஷான்)

மே மாதம் முதல் வாரத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

பலமான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மாத்திரமே மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை துரிதமாக முன்னெடுக்க முடியும் என  பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்தார்.

இக்கட்டான சூழ்நிலையில் புத்தாண்டு பண்டிகையினை கொண்டாடும் நிலை தோற்றம் பெற்றுள்ளது. சுகாதார துறையினரது அறிவுறுத்தல்களை பின்பற்றி பண்டிகையினை பாதுகாப்பான முறையில் கொண்டாடுவது அவசியமாகும்.

மே மாதம் முதல் வாரத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறான நிலையிலும் சுகாதார பிரிவினர் குறிப்பிடும் ஆலோசனைகள் தொடர்ந்து  முன்னெடுக்கப்படும்.

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த உரிய திட்டங்கள் தேசிய உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டுள்ளது.

மே மாதம் இறுதி வாரத்தில் பொதுத்தேர்தல் பாதுகாப்பான முறையில் இடம் பெறும்.

பலமான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மாத்திரமே மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முறையாக முன்னெடுக்க முடியும். ஆகவே பொதுத்தேர்தலில் மக்கள் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானித்தை எடுக்க வேண்டும் என்றார்.

--