“அடுத்த  இரு வாரத்திற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கினால் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவர முடியும்”

Published By: Digital Desk 3

13 Apr, 2020 | 04:47 PM
image

(ஆர்.யசி)

இறுக்கமான சுகாதார மற்றும் சட்ட கட்டமைப்பில் தொடர்ந்தும் செயற்பட்டால் " கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த மேலும் இருவாரகாலம் போதுமானதாக இருக்கும், ஏப்ரல் மாத இறுதியுடன் நாட்டில் பல மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த முடியும் என அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் " கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இன்னும் எத்தனை நாட்கள் இவ்வாறான நிலைமைகள் முன்னெடுக்கப்படும் என்பதற்கு பதில் தெரிவித்த சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறுகையில்,

மிகவும் கடினமான கால கட்டத்தில் நாம் இன்று முகங்கொடுத்து வருகின்றோம். நாளாந்தம் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

எனினும் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் தவிர்ந்து ஏனையவர்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படாத வண்ணமே உள்ளதாக வைத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் மக்களை பாதுகாக்க எடுத்த வேலைத்திட்டத்தின் பிரதிபலன் என்றே கூற வேண்டும்.

எவ்வாறு இருப்பினும் இப்போது நாம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நாம் முன்னெடுத்தால் மட்டுமே எம்மால் வெகு சீக்கிரமாக இந்த நிலைமைகளில் இருந்து விடுபட முடியும்.  எவ்வாறு இருப்பினும் இந்த மாத இறுதிக்குள் வெளி மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த முடியும் என்ற நிலைப்பாடும் உள்ளது.

ஆகவே  அடுத்த இரண்டு வார காலம் மக்கள் எமக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்பட வேண்டியது கட்டாயமாகும் என்றார்.

இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜெயசிங்க தெரிவிக்கையில்,

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலானது குறைந்ததாக கருத முடியாது. ஆனால் நாம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களின் மூலமாக நிலைமைகளை இன்றுவரை கட்டுபாட்டில் வைத்திருகின்றோம்.

ஆகவே இதே நிலைமை மேலும் இருவார காலமேனும் தொடர வேண்டும். அவ்வாறு கடுமையான சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் மட்டுமே எம்மால் நாட்டின் நிலைமைகளை சரிசெய்ய முடியும்.

ஆகவே அடுத்த இரண்டு வாரகாலம் சுகாதார வேலைத்திட்டங்களை மிகச் சரியாக முன்னெடுத்தால் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் நாட்டில் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவர முடியும். அதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செய்து வருகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01