ஹெரோயின் கடத்தல் தொடர்பான வழக்கொன்றிற்கு சாட்சியமளிக்க  சென்ற நபர் மீது, மஹர மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு முன்பாக வைத்து இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

  இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதோடு மஹர நீதிமன்ற வளாகத்தில் பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

பலியான நபருடைய உடல் தற்போது ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஹைபிரிட் காரொன்றில் வந்துள்ள நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மஹர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.