ஒட்டு மொத்த உலகையே அச்சத்தில் உறையச் செய்துள்ளது உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ். கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் நாளுக்கு நாள் மிக மோசமாகி வருகின்ற நிலையில், நியூயோர்க்கில் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு சடலங்களை புதைக்க கூட இடம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் பொது பூங்காக்களை கல்லறைகளாக மாற்ற யோசனை செய்து வருகிறார்கள்.
அமெரிக்காவில் இதுவரை 551,081 பேர் பாதிக்கப்பட்டும், 22,105 பேர் பலியாகியும் உள்ளனர். இதிலும், உலகிலேயே மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக நியூயோர்க் உருவெடுத்து உள்ளது
இந்நிலையில் நியூயோர்க் மாகாணத்தில் கொரோனாவினால் பலர் பலியாகி வருவதால் அங்கு சடலங்களை புதைக்க கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அங்கு தினமும் சராசரியாக 800 பேர் வீதமானோர் பலியாகிறார்கள். அங்குள்ள பெரிய கல்லறைகள் எல்லாம் இப்போதே சடலங்களை புதைக்க இடம் இன்றி காணப்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
அத்தோடு, ஏற்கனவே 2 ஆயிரம் பேருக்கும் அதிகமான உடலை வைத்தியசாலையில் ஐஸ் பெட்டிகளுக்கு வைத்து உள்ளனர். வெளியே புதைக்க இடம் இல்லாத காரணத்தால் இந்த உடல்களை புதைக்காமல் வைத்து இருக்கிறார்கள்.
நியூயோர்க்கில் சடலங்களை புதைக்க இடம் இல்லாத காரணத்தால் அங்கு அருகே இருக்கும் மாகாணங்களில் உடல்களை புதைக்க திட்டமிட்டு வருகிறார்கள்.
மேலும், நியூயோர்கிலுள்ள பெரிய மற்றும் சிறிய கல்லறைகள் அனைத்திற்கும் தினமும் 80-90 சடலங்கள் வருவதாக அங்கு பணியாற்றும் நபர்கள் தெரிவிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM