(இராஜதுரை ஹஷான் )
பூகோள மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இலங்கை உட்பட தெற்காசிய வலய நாடுகள் 40 வருட காலத்திற்கு பின்னர் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி நிலையை எதிர்க் கொண்டுள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

வைரஸ் தாக்கம் காரணமாக பொருளாதார வளர்ச்சி நூற்றுக்கு 1.8 சதவீதம் தொடக்கம் 2.8 சதவீதம் பின்னோக்கி செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் 06 மாத காலத்திற்கு முற்பட்ட காலம் வரை தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் உயர்வடையலாம் என கணிக்கப்பட்டிருந்த்து.
இருப்பினும் தற்போதைய நிலவரப்படி தெற்காசிய வலய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 1.8-2.8 சதவீதம் வரை பின்னடையும்.
அதேபோல் இவ்வருடம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 1.5 சதவீதம் தொடக்கம் 2.8 சதவீதம் வரை குறைவடையலாம் என உலக வங்கி ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் இவ்வாறான நிலையில் வீழ்ச்சியடைந்தாலும், இலங்கை உட்பட பெரும்பாலான தெற்காசிய வலய நாடுகளின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடையும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM