(செ.தேன்மொழி)
ஊரடங்கு சட்டத்தின் போது செயற்படுவதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது மக்கள் தங்களது அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஊரடங்கு அமுலில் இருக்கும் காலப்பகுதியிலும் அத்தியாவசிய சேவையாளர்களுக்கு பிரவேசிப்பதற்காக அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை சிலர் முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர். அத்தியவசிய சேவை என்ற போர்வையில் ஹெரோயின் கடத்தல், சட்டவிரோத மதுபான விநியோகம் மற்றும் மாடுகளை ஏற்றிச் செல்லல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வைத்தியர் போன்ற போர்வையில் நபரொருவர் ஹெரோயின் போதைப் பொருளை கடத்த முற்பட்ட போது பொலிஸார் அவரை கைது செய்திருந்தனர். இவர்கள் இன்னும் வைரஸ் தொடர்பில் காணப்படும் அச்சுறுத்தல் நிலைமையை கருத்திற் கொள்ளாதே செயற்பட்டு வருகின்றனர்.
வைரஸ் பரவலின் காரணமாக ஏற்படும் நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டே அரசாங்கம் ஊரடங்கை அமுல் படுத்தியுள்ளது. இந்த தருணத்திலும் சிலர் சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர்.
இது போன்ற நபர்கள் தொடர்பில் பெரிதும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இவ்வாறு கைது செய்யப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM