கொவிட் எனப்படும் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா இத்தாலியை முந்தி முதல் இடத்தில் உள்ளது.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ,வெளியிட்டு உள்ள புள்ளிவிவரத்தின் படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால்  20577 பேர் உயிரிழந்துள்ளதுடன், 527111 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவின் அனைத்து  மாநிலங்களும் கொரோனா உயிரிழப்பை பதிவு செய்து உள்ளன. கொரோனா வைரஸிலிருந்து மரணத்தை அறிவிக்காத ஒரே மாநிலம் வயோமிங் ஆகும்.

கடந்த 2 நாட்களில் இத்தாலியை விட அமெரிக்காவில் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. இத்தாலியில் இறப்பு எண்ணைக்கை 19468 ஆக உள்ளது.