(ஜே.ஜி.ஸ்டீபன், ப.பன்னீர்செல்வம்) 

காணாமல்போன கணவர்மாரைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த எமது பெண்கள் தமது தாலிகளை தொடர்ந்தும் அணிந்திருப்பதா அல்லது கழற்றிவிடுவதா என்றும்  நெற்றியில்  வைத்திருக்கும் பொட்டினை  தொடர்ந்தும் வைத்திருப்பதா அல்லது அழித்துவிடுவதா என்பதைக் கூட தீர்மானித்துக் கொள்ள முடியாத நிலையில் அவர்கள் இருக்கின்றனர்.

இவர்கள் தொடர்பில் நல்லாட்சி  அரசாங்கம் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.