நீண்ட முடக்குதலை தளர்த்திக் கொள்வதற்கான முதல் படியை எடுத்துள்ள டென்மார்க்

12 Apr, 2020 | 11:44 AM
image

கொரோனா வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியல் முடக்குதலை மேற்கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான டென்மார்க் அதனை தளர்த்தி கொள்ளவதற்கு தீர்மானித்துள்ளது.

குறைந்தது ஒரு மாதகாலமாக மூடப்பட்டிருந்த டென்மார்க்கில் கொரோனா தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டதை தொடர்ந்து முதல் படியாக பாடசாலைகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையங்களை புதன் கிழமை முதல் மீண்டும் திறக்க உத்தேசித்துள்ளது.

அத்துடன் பார்கள், உணவகங்கள், வியாபார நிலையங்கள் என்பவற்றை திறப்பதற்கும் மற்றும் 10 க்கும் மேற்பட்ட நபர்களின் பொதுக் கூட்டங்களுக்கு எதிரான தடை போன்றவை நீக்கப்படுவதற்கும் இன்னும் ஒரு மாத காலமாவது ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பூட்டுதல் விதிகள் படிப்படியாக தளர்த்தப்பட்டால் மட்டுமே இந்த திட்டம் செயல்படும் என்று டென்மார்க்கின் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் எச்சரித்துள்ளார்.

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், 

'இது இறுக்கமான பாதையில் நடப்பது போன்றதாக இருக்கும். 'நாங்கள் வழியில் நின்றால் நாம் விழக்கூடும், நாம் மிக வேகமாக சென்றால் அது தவறாக போகக்கூடும்.

எனவே, நாம் சரியான நேரத்தில் ஒரு எச்சரிக்கையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.

டென்மார்க் நாட்டில் இதுவரை 5,996 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன்  260 பேர் இறந்தும் 1955 பேர் குணமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52