ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கைப் பிரஜைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் காணொளிகள் உண்மைக்கு புறம்பானது என அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கை பிரஜைகளை வைத்தியசாலைகளிலும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலும் அனுமதித்து சிறந்த முறையில் உரிய சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

அத்துடன் இலங்கை தூதரகம், இலங்கை துணைத் தூதரகம் பொது அலுவலகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், நலன்புரி அமைப்புகள் மற்றும் பிற சமூகம் மற்றும் மத அமைப்புகள் ஆகியவை இலங்கை நாட்டினருக்கு உலர் உணவு மற்றும் பிற தேவைகளை வழங்கி வருகின்றனர்.

எனவே இலங்கை தூதரகம் அல்லது இலங்கை தூதரக பொது அலுவலகம் ஆகியவற்றிலிருந்து வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் நம்புமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.