கால்பந்து லீக் போட்டிகளை அவசரப்பட்டு ஆரம்பிப்பது ஆபத்தாகி விடும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவர் கியானி இன்பான்டினோ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான உள்நாட்டு லீக் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் யூரோ 2020 மற்றும் கோபா அமெரிக்கா தொடர் போன்ற முக்கிய போட்டிகள் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனால் சம்பந்தப்பட்ட நாட்டு கால்பந்து சம்மேளனங்கள் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. அது மாத்திரமன்றி உலகக் கிண்ண கால்பந்து தகுதி சுற்று போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
‘நாங்கள் நடத்தும் கால்பந்து போட்டிகளில் உடல் ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு தான் முதலில் முக்கியத்துவம் அளிக்கிறோம். மனித உயிரை விட விளையாட்டு பெரிது கிடையாது. அது தான் எங்களது முன்னுரிமை, நோக்கம்.
கழக போட்டிகளை நடத்துபவர்களையும் இதை பின்பற்றும்படி அறிவுறுத்துகிறோம். அதை நான் எவ்வளவு வலியுறுத்தி கூறினாலும் போதாது. எந்த ஒரு ஆட்டம் அல்லது லீக் போட்டிகளுக்காக மனித உயிரை ஆபத்தில் சிக்க வைப்பது சரியானது கிடையாது. ஒவ்வொருவரின் மனதிலும் இந்த விஷயம் தெளிவாக இருக்க வேண்டும்.
நிலைமை 100 சதவீதம் பாதுகாப்பாக இல்லாதபட்சத்தில் போட்டிகளை மறுபடியும் தொடங்கினால் அது மிகவும் பொறுப்பற்ற செயலாகி விடும். இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM