வுஹானில் மர்மமான முறையில் இயங்கிவருவதாக கூறப்படும், சர்ச்சைக்குரிய ஆய்வகத்தின் உள்ளே விண்வெளி வீரர்களைப் போல உடையணிந்து கொடிய நோய்க்கிருமிகளைப் பற்றி கற்கும் விஞ்ஞானிகளை காட்டும் அரிய புகைப்படங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இப் புகைப்படங்கள் வுஹான், இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி எனப்படும் ஆய்வகத்தின் உட்புறங்களைக் காண்பிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகத்தில் 1,500 கொடிய நோய்க்கிருமிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக இங்கு உள்ள விஞ்ஞானிகள் முழு உடல் பாதுகாப்பு அங்கிகள் மற்றும் தலைக் கவசங்களை அணிந்துள்ளதை இவ் புகைப்படங்கள் காட்டுகின்றன.

கொரோனா வைரஸ் அங்கிருந்து தப்பித்திருக்கலாம் என்று சில தகவல்கள் வெளியாகிய போதும் அவை உறுதிப்படுத்தப்படவில்லை.

அத்துடன் விஞ்ஞானிகள் இக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன் வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவியதாக வலியுறுத்துகின்றனர்.