இலங்கையின் தற்போது வரையான கொரோனா நிலவரம் இதோ !

10 Apr, 2020 | 09:49 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

 

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கையில் இன்று இரவு 7.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்லை.

'வைத்தியசாலைகளில்  பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கூட இன்று எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை.' என இது குறித்து தகவல்களை உறுதிப்படுத்திய சுகாதார சேவைகள்  பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வீரகேசரிக்கு தெரிவித்தார்.

இந் நிலையில் இதுவரை இலங்கையில் 190 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்றும் 5  தொற்றாளர்கள் பூரண  குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். 

அதன்படி இலங்கையில் தொற்றுக்குள்ளானோரில் 7 பேர்  உயிரிழந்த நிலையில், 55 பேர் குண்மடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி மேலும் 129 பேர் மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.  

அவர்களில் 83 பேர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும் 27 பேர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும் 17 பேர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைவிட இன்று வரை 32 வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 224 பேர் சிகிச்சை பெற்று வருவதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு குறிப்பிட்டது.

இதேவேளை,  கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோருடன் நெருங்கி செயற்பட்டவர்கள் சுய தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில்,  பல பகுதிகளில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றாமல்  தான்தோன்றித்தனமாக இருப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

 இந் நிலையில் இன்றையதினம் இவ்வாறான 23 பேர் ஜா-எலயில் இருந்து கடற்படையின் ஒலுவில் தனிமைபப்டுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறிய கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர் , இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா புத்தளம் பகுதியிலும் அத்தகைய சம்பவங்கள் பதிவானதாக கூறினார்.

 அதன்படி புத்தளத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 59 பேர் இன்று இராணுவத்தின் கட்டுகெலிய தனிமைபப்டுத்தல் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் கடந்த 8 ஆம் திகதி முழுமையாக முடக்கப்பட்டுள்ள மன்னார் – தாராபுரம் கிராமத்தில் கிருமி நீக்கும் நடவடிக்கைகள்  இன்று முன்னெடுக்கப்பட்டன.

அங்கு 464 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், இரண்டு குடும்பங்கள் புத்தளத்தில் இருந்து வந்த கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணியதால் அந்தப் பகுதி முற்றாக முடக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேரிடம் இன்று கொரோனா தொற்று பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. 

காலை 7.00.மணியளவில் , மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பங்களின் வீடுகளுக்கும் சென்று மாதிரிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

பரிசோதனை மாதிரிகள் மன்னார் பிராந்திய சுகாதார பணிப்பாளரால் நேரடியாக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

இந் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலும் நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் 12 யோசனைகளை முன்வைத்துள்ளது.

அபாய வலயங்கள் தொடர்பில் ஆய்வு செய்து, ஏனைய பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது அல்லது இலகுபடுத்துவது ஏற்புடையது என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், இதனை நடைமுறைப்படுத்தும் போது சமூக இடைவௌியைப் பேணுவது முக்கியமானது எனவும் சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பேருந்துகளின் ஆசனங்களில் 50 வீதத்திற்கு மக்களை வரையறுத்து போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு அந்த சங்கம் அரசாங்கத்தை கோரியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33