கொரோனா வைரஸ் தொடர்பில் பல பொய்யான வதந்திகள் பரவி வரும் நிலையில், 5 G உள்ளிட்ட ரேடியோ அலைகளில் கொரோனா வைரஸால் பயணிக்க முடியாது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ரேடியோ அலைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தாது என்றும் வைரஸ்களுக்கு ரேடியோ அலை மூலம் பயணிக்க முடியாது என்பதுடன் அவை குறிப்பிட்ட புள்ளிகளினூடாக மட்டுமே உடலில் நுழைய முடியும் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வைரஸ் நேரடி மனித தொடர்பு, இருமல் அல்லது வைரஸ் தொற்றுக்குள்ளான மேற்பரப்புகள் வழியாகவும் பரவலடைகின்றது என தெரிவித்துள்ள வைத்தியர்கள் COVID-19 தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள கை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுவதை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.