பிரான்சின் விமானதாங்கி கப்பலில் உள்ள 50 படைவீரர்களிற்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளமை உறுதியாகியுள்ளது.

சார்லஸ் டி கோல் கப்பலில் உள்ள மூவர் பிரான்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என பிரான்சின் பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ பணியாளர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளின் போது 50ற்கும் அதிகமானவர்கள் வைரஸ் பாதிப்பிற்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது ,மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்தும் கப்பலில் தங்கியிருந்து பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

 பிரான்சின் ஒரேயொரு விமானதாங்கி கப்பல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அட்லான்டிக் சமுத்திரத்தில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கப்பல் மத்திய தரை கடல் பகுதியில் உள்ள துறைமுகத்திற்கு திரும்பியுள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.