சைப்பிரசில் பணியாற்றுகின்ற ஐக்கிய நாடுகள் அமைதிப்படையை சேர்ந்த வீரர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட படைவீரர் சிறிதளவு நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தினார் அதன் பின்னர் அவரை பரிசோதனை செய்தவேளை அவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது.

வீட்டிற்குள் இருக்கவேண்டும் என்ற சைப்பிரஸ் அரசாங்கத்தின் உத்தரவை பேணுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைதிப்படை நடவடிக்கையில் படையினரை ஈடுபடுத்துவதை யூன் 30 திகதி இடைநிறுத்தியுள்ளது.

சைப்பிரசில் ஆயிரத்திற்கும் அதிகமான ஐ.நா. படையணியினர் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.