கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் காண்பதற்கான புதிய பரிசோதனைகள் ஒரு வார காலப்பகுதிக்குள் அமெரிக்காவில் ஆரம்பமாகும் என தொற்றுநோய் மற்றும் ஒவ்வாமைக்கான  அமெரிக்க நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் அன்டொனி பவுசி தெரிவித்துள்ளார்.

ஒரு வாரகாலத்திற்கு நாங்கள் எங்களிடமுள்ள பல பரிசோதனை முறைகளை பரிசோதனை செய்து பார்க்கபபோகின்றோம்; என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வாரத்திற்குள் பல பரிசோதனைகள் தயாராகிவிடும் என இந்த பரிசோதனைகளை உருவாக்கி சரிபார்த்து பரப்புபவர்கள் வெள்ளை மாளிகை செயலணியின் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதையும் நீங்கள் நல்லநிலையில் காணப்பட்டால் நீங்கள் எப்போது குணமடைந்தீர்கள் என்பதையும் இந்த பரிசோதனைகள் மூலம் தெரிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் சமூகத்தில் எவ்வளவு ஆழமாக பரவியுள்ளது என்பதையும்,முன்னர் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படுவார்களா என்பதையும் இந்த பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யமுடியும் என குறிப்பிட்டுள்ள பௌசி இது சுகாதார பணியாளர்களிறகு  மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளார்.