கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய Amcor நிறுவனத்தினரால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் நேற்று (09) மூதூர், வெருகல், கிண்ணியா, திருகோணமலை பட்டினமும் சூழலும்,  குச்சவெளி,  தம்பலகாமம் உள்ளிட்ட அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்பட்டது.

1080 ரூபாய் பெறுமதியான 7500 பொதிகளில் 2500 பொதிகள் திருகோணமலை மாவட்டத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.

பாரப்படுத்தப்பட்ட பொதிகள் கிராம சேவகர்கள் மற்றும் கிராம மட்ட பிரதி நிதிகள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளை சென்றடையும்.