கொவிட்-19 தொற்று உலகளாவிய ரீதியில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதோடு, வாழ்வாதாரத்திலும் கை வைத்திருக்கிறது. அந்தவகையில், வீடுகள் மாத்திரமன்றி தொழில் நிறுவனங்களின் வாடகையையும் கட்டமுடியாத நிலையில் மக்கள் தவிக்கின்றனர்.
இவ்விவகாரத்தில் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான வி. ஜனகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனகன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கொரோனா வைரஸ் தொற்றுப் பிரச்சினை காரணமாக, தனிநபர்கள் பலர் இன்னோரன்ன தொல்லைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
பலர் வேலை வாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பல நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட சம்பளத்தை மாத்திரமே வழங்கத் தீர்மானித்திருக்கின்றன. இத்தகைய இக்கட்டான நிலையினால், பலரது அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதை உணரமுடியும்.
இருந்தபோதிலும் அத்தியாவசிய தேவைகளுக்கான விலைகள் அதிகரித்துச் செல்கின்றன. வருமானம் குறைகின்றபோதிலும் பொருள்களின் விலை அதிகரித்தே செல்கிறது.
ஒருபக்கம் வருமானம் பாதிக்கப்படுகின்றபோது, மறுபுறத்தில் உணவு, மருந்துப் பொருள்களின் விலைகள் அதிகரித்துச் செல்கின்றன. இத்தகைய நிலையைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டம் மந்தகதியிலேயே தொடர்கின்றமை துரதிர்ஷ்டவசமானது.
அதுமாத்திரமன்றி, வாடகை செலுத்துபவர்களும் பெரும் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். வீடுகள் மாத்திரமன்றி தொழில் நிறுவனங்களின் வாடகையையும் கட்டமுடியாத நிலையில் மக்கள் தவிக்கின்றனர். இது சம்பந்தமாக எவரும் தீர்வு கொடுக்கவில்லை. இவ்விவகாரத்தில் அரசாங்கம் எதுவித அக்கறையும் காட்டவில்லை.
உலக நாடுகள் பலவும் இத்தகைய நிலையைக் கருத்திற்கொண்டு சில திட்டங்களை அமுல்படுத்தியிருக்கிறார்கள். சிங்கப்பூர்கூட 3 மாதங்களுக்கு வாடகை அறவிடவேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் இலங்கையில் இத்தகைய நிலையை எவரும் கருத்திற்கொள்ளவில்லை.
வாடகை வழங்குபவர்கள் மாத்திரமன்றி வாடகை பெறுபவர்களுக்கும் பிரச்சினை இருக்கிறது. ஆகையால் இவர்கள் இருதரப்பையும் கவனத்திற்கொண்டு, நிவாரணங்களை வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொழும்பில் வீடு வாடகைக்குக் கொடுத்திருப்பவர்களும் நிலைமையை உணர்ந்து, வாடகை செலுத்துநர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல், நியாயமான முறையில் நடந்துகொள்ள வேண்டுமென வேண்டுகின்றேன்.
அதேபோல், வாடகை செலுத்துபவர்களும் தங்களால் இயன்றதைத் செலுத்தி, இருதரப்புப் பிரச்சினையையும் சுமூகமாகத் தீர்க்குமாறும் வேண்டிக்கொள்கிறேன். அரசாங்கமும் இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்து, அதற்கேற்ப சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM