குடும்பம், மக்களின் பாதுகாப்பை கருதியே சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளேன்- காதர் மஸ்தான்

Published By: J.G.Stephan

10 Apr, 2020 | 06:05 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

எனக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரும் எனது குடும்பம் மற்றும் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றேன்.

என்றாலும் எனது சுய தனிமைப்படுத்தலை ஒரு சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருவதை வன்மையாக கண்டிக்கின்றேன் என வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த மார்ச் 18ஆம் திகதி மன்னார் தாராபுரத்தில் இடம்பெற்ற மரண இறுதிச் சடங்கொன்றில் கலந்துகொண்டிருந்தேன். இந்த சடங்கில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நபரொருவர் புத்தளத்திலிருந்து வந்து கலந்து கொண்டிருந்தார். பின்னர் அவருக்கு கொரொனா தொற்று இருப்பதாக ஏப்ரல் 7ஆம் திகதி உறுதி செய்யப்பட்டதாக தெரியவந்தது.

குறித்த மரணச் சடங்கில் நானும் எனது சகோதரரும் கலந்து கொண்டிருந்தோம். இச்சம்பவம் நடைபெற்று இருபது நாட்கள் கடந்திருந்த நிலையில் மேற்படி நபருக்கு கொரொனா தொற்று உள்ளதை அறிந்துகொண்ட நான் எனது சுய விருப்பத்தின் பேரிலேயே பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு விடயத்தை தெரியப்படுத்தினேன்.

அதனடிப்படையில் என்னிடம் விபரங்களைக் கேட்டறிந்த சுகாதாரப் பரிசோதகர் மற்றும் அதிகாரிகள் எமக்கு கொரோனா தெற்றுக்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை என்பதை உறுதி செய்ததோடு, தேவையான ஆலோசனைகளையும் வழங்கினர். அத்துடன்  தனிமைப்படுதலுக்கான ஆலோசனைகள்  எதையும் வழங்கவில்லை. இருப்பினும் நானும் எனது சகோதரரும் எமது குடும்பத்தினர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட நாமே சுய தனிமைப்படுத்தலுக்கு எம்மை உட்படுத்திக்கொண்டுள்ளோம். இதுவரையில் நாம் எவ்வகையிலும் வெளிச் செல்லவில்லை.

என்னுடையதும் குடும்பத்தினரதும் பொதுமக்களினதும் பாதுகாப்பைக் கருதியே இவ்வாறு செயற்படுகின்றேன். எனினும் சில ஊடகங்கள் எனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் அதிகாரிகளினால் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும்  உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதை நான் அறிகின்றேன். இவை மிக மனவருத்தத்திற்குரிய பொய்யான  தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்ட செய்திகளாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இத்தகைய செயற்பாடுகளை என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ள சில சக்திகள் மக்களிடமிருந்து என்னை அன்னியப்படுத்தும் நோக்கிலே முன்னெடுக்கின்றன என நான் கருதுகின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55