(எம்.மனோசித்ரா)

மீனவர்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களால் பிடிக்கப்படும் மீன்களை துரிதமாக கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தால் 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆளுந்தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடல் தொடர்பில் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது :

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக எதிர்காலத்தில் உலகம் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடி நிலையைக் கருத்திற் கொண்டு தேசிய உற்பத்திகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்கமைய நாட்டு அத்தியாவசியமான அரிசி, மரக்கறி, பழங்கள்,  இறைச்சி உற்பத்திகள் என்பன பெருமளவில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

மீனவர்களால் பிடிக்கப்படும் மீன்களை சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய முழு நாட்டிற்கும் தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இதன் போது பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

கலந்துரையாடலில் கலந்து கொண்ட அத்தியாவசிய தேவைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜக்ஷ அரசாங்கம் முன்னர் அறிவித்ததைப் போன்று பொது மக்களும் மீனவ சமூதாயமும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்காதவாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மீன் பிடி தொழிலில் ஈடுபடுவதற்கு முமுமையான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என்பதால் மீதப்பட்டுள்ளன. உணவுகளை விநியோகிக்கும் போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகள்இ பழங்கள்இ இறைச்சி உள்ளிட்டவற்றின் கேள்வியை அதிகரிக்குமாறு கோரப்படுகின்றது. அவ்வாறில்லை என்றால் எமது உள்நாட்டு உற்பத்திகள் வீண் விரமடையும். அவற்றை சந்தைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்றும் இதன் போது பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர கருத்து தெரிவிக்கையில்இ மீன்களை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ள போதிலும்இ மீனவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு இரண்டு வார கால தேவைப்படும் என்று கடல்வள திணைக்களம் தெரிவித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மீன்பிடித்துறை அமைச்சிற்கு அரசாங்கம் 600 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் விரைவில் மீன்களை கொள்வனவு செய்து விநியோகிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மத்திய வங்கி 100 மில்லியன் நிதி ஒதுக்குவதாகவே தெரிவித்தது. எனினும் அமைச்சரவை 600 மில்லியன் நிதி ஒதுக்குமாறு தெரிவித்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்சஇ நாம் தற்போது மீன்பிடித் திணைக்களத்திடம் மீன்களை கொள்வனவு செய்யுமாறு பணிப்புரை விடுத்துள்ளோம். அதற்காக 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்பிடித் திணைக்களம் தலையிடுமானால் ஏனைய பிரதேசங்களில் 250 ரூபாய் வரை விற்பனை செய்யக் கூடியதாக இருக்கும் என்று கூறினார்.

அவ்வாறு ஏனைய பிரதேசங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்வதற்கு அமைச்சர்கள் நடவடிக்கை எடுத்தால் அதற்கான நிதி ஒதுக்கீட்டை எம்மால் முன்னெடுக்க முடியும் என்று தெரிவித்த பசில் ராஜபக்ச இ சிறந்த மீன்களை 250 – 300 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என்றும் கூறினார்.