(எம்.மனோசித்ரா)

முறையாக திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்ற செயற்திட்டங்கள் காரணமாக நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவலை இயன்றளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக தெரிவித்துள்ள இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, மக்களின் நலனுக்காக இராணுவத்தினர் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்ப்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

முறையாக திட்டமிடப்பட்டுள்ள செயற்திட்டங்கள் காரணமாக நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவலை இயன்றளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

இது வரையில் முப்படையினரால் செயற்படுத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிக்பு நிலையங்களில் மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போதும் 1300 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய மக்களின் நலன்களுக்கான இராணுவத்தினர் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்பார்த்துள்ளோம் என்றார்.