இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என  சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 4.30 மணிவரையான 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்

நேற்றுவரை 190 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் 133 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது 224 பேர் வைத்தியசாலையில் நோய்த் தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்கள்.

அதேவேளை, இதுவரை கொரோனா தொற்றினால் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான 50 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.