இங்கிலாந்தில் 101 வயதான வயோதிபர் ஒருவர்  கொவிட்-19 தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார்.

இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்டில் உள்ள “வொர்செஸ்டர்ஷைர்” (Worcestershire) எனும் மாவட்டத்தில் உள்ள கீத் வட்சன் என்ற வயோதிபரே இவ்வாறு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

குறித்த வயோதிபர் காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவரின் உடல் வெப்பநிலை அதிகரித்தமையால் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதைப்பற்றி அவரின் குடும்பத்தார் கருத்து தெரிவிக்கையில்,

"அறுவை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றார், பின்னர் அவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டதை அறிந்தபோது நாங்கள் கவலை அடைந்தோம்" . தற்போது அவருடைய வயதிற்கு அவர் குணம் பெற்றது ஆச்சரியமாக உள்ளதென தெரிவித்துள்ளார்கள்.

மேலும்,  இரண்டு வாரங்கள் வைத்தியசாலையில் இருந்தபின் தனது வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளதாகவும்,அவரது காலில் ஏற்பட்ட வலி சாதாரணமாகியுள்ளது, ஆனால் "வேறு எதுவும் இல்லை" என தெரிவித்துள்ளார்கள்.

குறித்த வயோதிபர் குணமடைந்த விடயம் வொர்செஸ்டர்ஷைர் அக்யூட் வைத்தியசாலை பேஸ்புக் தளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.