(எம்.மனோசித்ரா)

இடர் வலயங்கள் மற்றும் முழுமையாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மருந்தகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மருந்தகங்களை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் முழுமையாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் முன்னரே அறிவித்துள்ளமையைப் போன்று இணையத்தளம் ஊடாக அல்லது தொலைபேசியில் அழைப்பினை மேற்கொள்வதன் மூலம் மருந்துகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.