பதுளை, அக்குறணையைச் சேர்ந்த 12 பேரை தியத்தலாவை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை !

Published By: Vishnu

10 Apr, 2020 | 05:28 PM
image

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்ட நோயாளிகளுடன் தொடர்புகளை கொண்டமைக்காக அக்குwணை மற்றும் பதுளையைச் சேர்ந்த 12 பேரை தியத்தலாவை  தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

6 ஆண்கள், 2 பெண்கள், 2 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் அடங்கிய 12 பேர் கொண்ட குழுவே இவ்வாறு தியத்தலாவை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதேவளை கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான செயல்பாட்டு மையத்தின் 09 திகதிக்கான ஊடக சந்திப்பு ராஜகிரியவில் நேற்று மாலை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி அஜித் ரோகன ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 28 தினங்களாக தனிமைப்படுத்தல் செயற்பாடுகளின் பின்னர் 37 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் இருந்த ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்மையால் இரண்டு தடவைகள் பீசிஆர் சோதனை செய்யப்பட்டு கொவிட் 19 வைரஸ் தொற்றாமை உறுதி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுனர்.

இதுவரை 3459 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1311 பேர் தொடர்ந்தும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி நகரத்தில் இரண்டுநோயாளர்கள் இனங்காணப்பட்மையால் 23 குடும்பங்களின் 67 பேர் தியதலாவ காகொல்ல தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

அதேபோல் அண்மையில் இந்தியாவில் இருந்து வந்த அகுரஸ்ஸ பகுதியின் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்மையால் அவர்களின் உறவினர்கள் 16 பேர் புனானி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

புத்தளம் பகுதியில் இனங்காணப்பட்ட ஒருவர் மன்னார் தாராபுரம் கிராமத்தில் இடம்பெற்ற மரணச்சடங்கில் 18 ஆம் திகதி பங்குகொண்டு பலருடன் தொடர்பினை கொண்டிருந்மையால் அக்கிராமத்தின் 900 குடும்பங்களின் 4600 க்கு மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டுசெல்ல இயலாமை காரணமாக மன்னார் தாராபுரம் கிராமம் முடக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால்...

2025-03-17 21:38:50
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை விவகாரம் அரசாங்கத்துக்கு...

2025-03-17 15:29:36