(நா.தனுஜா)

இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட சில சிறைச்சாலைகளுக்கு மத்தியில் பாதுகாப்பான தொலைத்தொடர்பு வலைப்பின்னலொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட சில சிறைச்சாலைகளுக்கு மத்தியில் பாதுகாப்பான தொலைத்தொடர்பு வலைப்பின்னலை ஏற்படுத்தி, நீதிமன்ற நடவடிக்கைகளை அதனூடாக நடத்துவதற்கான செயற்திட்டத்தை தொலைத்தொடர்பு ஆணைக்குழு உருவாக்கியிருக்கிறது.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு சமூக விலகல் என்பது முக்கியமான விடயமொன்றாக வலியுறுத்தப்பட்டுவரும் நிலையிலேயே அதற்கு உதவும் வகையில் இந்த செயற்திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.