பொரளையில் இன்று (10.04.2020) இடம்பெற்ற விபத்தில் ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளை டி.எஸ் சந்தியில் மருத்துவமனை ஊழியர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து வந்த அம்பியூலன்ஸ் வண்டி ஒன்றும் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்கள்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.