(நா.தனுஜா)

அதிக பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான மருத்துவ உபகரணங்களில் முதலீடு செய்வதில் அரசாங்கம் இன்னமும் தயக்கம் காட்டுவதற்கான காரணம் என்ன? தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையை வலிந்து குறைவாகக் காண்பிப்பதே அவர்களின் நோக்கமா? என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:

'கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் செய்யும் எண்ணிக்கையை அதிகரிப்பதொன்பதே தற்போது மிகவும் முக்கியமானதாகும்.

அவ்வாறிருக்க அதிக பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான உபகரணங்களில் முதலீடு செய்வதில் அரசாங்கம் இன்னமும் தயக்கம் காட்டுவதற்கான காரணம் என்ன? தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையை வலிந்து குறைவாகக் காண்பிப்பதே அவர்களின் நோக்கமா? இந்த கொரோனா வைரஸ் பரவலை அரசியல்மயப்படுத்துவதை நிறுத்துங்கள்'