வவு­னியா,வவு­னி­யாவில் செவ்­வாய்க்­கி­ழமை மாலை கடத்­தப்­பட்ட வர்த்­தகர் செல்­வ­ராஜா கடத்­தல்­கா­ரர்­க­ளினால் நேற்று புதன்­கி­ழமை பகல் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

வவு­னியா, மன்னார் வீதியில் உள்ள பூவ­ர சங்­குளம் பகு­தியில் கடத்­தல்­கா­ரர்கள் இவ ரைக் கொண்டுவந்து வாகனம் ஒன்றில் இருந்து இறக்­கி­விட்டுச் சென்­ற­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

விடு­த­லை­யா­கிய வர்த்­த­க­ரி­டம் கடத்தல் சம்­பவம் தொடர்­பாக பொலிசார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வாக்­கு­மூலம் பெற்­றுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆயினும் அது­பற்­றிய விப­ரங்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இந்தச் சம்­பவம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்தும் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை இவ­ரு­டைய கடத்­தலைக் கண்­டித்தும், வர்த்­த­கர்­களின் பாது­காப்பை உறுதி செய்யக் கோரியும் வ்வுனியா வர்த்­தகர் சங்கம் வெள்ளியன்று நடத்தவிருந்த கடையடைப்பு கைவிடப்பட்டுள்ளதாக வர்த்தகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.