வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தட்டாங்குளம் காட்டுப்பகுதியில் நேற்று (09.04.2020) முன்னெடுக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நடவடிக்கை வாரிக்குட்டியூர் இளைஞர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதை அறிந்த வாரிக்குட்டியூர் பகுதி இளைஞர்கள் பூவரசங்குளம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததுடன் அப்பகுதிக்கு சென்று முற்றுகையிட்டனர்.

இதன்போது  கசிப்பு காய்ச்சும் செயற்பாட்டை முன்னெடுத்த நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில் கசிப்பு காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும், பெரல்கள் என்பவற்றை வாரிக்குட்டியூர் பகுதி இளைஞர்கள் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர். 

வவுனியாவில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் கிராமங்களில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.