யேமனில் ஹட்ரமவுட் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவது போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சுகாதார உதவி குழுக்கள் எச்சரிக்கின்றன.

நேற்று யேமனின் ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக சவுதி - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைமையிலான இராணுவக் கூட்டணிக்கிடையில் ஒருதலைப்பட்ச இரண்டு வார போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

ஐந்தாண்டு மோதல் யேமனை பேரழிவிற்குட்படுத்தியுள்ளது, 100,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது, மேலும் அதை உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியாக ஐ.நா கருதுகிறது.

இந்நிலையில், ஹரோமவுட் மகாணத்தில் முதல் நபருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குழு டடுவிட்டர் மூலம் இன்று தெரிவித்துள்ளது.