தற்காலிகமாக நேற்றைய தினம் மூடப்பட்டிருந்த குருணாகல் போதானா வைத்தியசாலையின் அவசர  சிகிச்சை பிரிவு மீண்டும் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகளை வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளி வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து மேற்படி அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இந் நிலையில் இன்று காலை 8.00 மணியளவில் அவசர சிகிச்சை பிரிவு கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.