இத்தாலி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சையளித்த 100 வைத்தியர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

வைத்தியர்கள், தாதியர்களுக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கொரோனாவுக்கு எதிராக போராடுவதாக அந்நாட்டு வைத்தியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 18,279 பேர் உயிரிழந்துள்ளனர். 1,43,626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இத்தாலியில் கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் வைத்தியர்கள் உயிரிழப்பு 100ஐ கடந்துள்ளது என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே 30 மருத்துவ பணியாளர்கள், தாதியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.