கொரோனா வைரஸ் தோற்றம் பெற்ற சீனாவின் வுஹான் நகரில், தமது காலை உணவிற்காக 76 வகையான உணவுகளை சீன பெண் ஒருவர் ஓடர் செய்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்ததையடுத்து முடக்கப்பட்ட வுஹான் 76 நாட்களின் பின் கடந்த புதன்கிழமை வழமைக்குத் திரும்பியதையடுத்து, மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், பெண் ஒருவர் 76 நாட்கள் கடுமையான தனிமைப்படுத்தலின் போது தாம் தவறவிட்ட காலை உணவுகளை ஒரேநாளில் பிரபலமான ஹோட்டல் ஒன்றில் ஓடர் செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த ஹோட்டலின் விநியோக தொழிலாளி 76 வகையான உணவுகள் அடங்கிய பைகளை ஒரு மர கம்பத்துடன் இணைத்து அவரது தோள்பட்டையில் சுமந்து செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இது வுஹான் குடியிருப்பாளர்கள் தனிமைப்படுத்தலின் கீழ் கழித்த நாட்களின் அடையாளமாகும் என செய்திசேவைகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சீனாவில் கொரோனா தொற்றுநோய் தொடங்கிய நகரமான  வுஹானுக்கு அதன் 11 மில்லியன் குடியிருப்பாளர்களை கிட்டத்தட்ட 11 வாரங்களுக்குப் பிறகு உள்ளேயும் வெளியேயும் பயணிக்க அனுமதித்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.