குருணாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் குறித்த பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளியொருவர் கொரோனா வைரஸ் தொற்று போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியமையினாலேயே அவசர சிகிச்சை பிரிவு இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.

இதேவேளை குருணாகல் வைத்தியசாலையில் பணிபுரியும் 39 ஊழியர்கள் கொரோனா தொற்று என்ற சந்தேகத்தின் பேரில் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.