உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி இன்று வெள்ளி காலை நிலவரப்படி 1,601,018 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 95,718 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் பெரும் பங்கினர் அமெரிக்காவில் உள்ளனர். அங்கு 465,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

இந்நிலையில், நேற்றைய நிலவரத்தின் படி, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீன நகரமான வுஹானில் இயல்பு நிலை திரும்ப ஆரம்பித்துள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 50 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐ.நாவின் ஆய்வறிக்கை கூறுயுள்ளமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - தமிழ்நாட்டில், வியாழன்று மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன்  மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடதக்கது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை இந்தியாவில் மொத்தம் 5734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு நேற்று வியாழன் மாலை தெரிவித்துள்ளது.