விசேட வைத்திய நிபுணர்களுடன் ஜனாதிபதி மேற்கொண்ட விசேட கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் !

09 Apr, 2020 | 08:21 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவலை துரிதமாகக் கட்டுப்படுத்துவதற்காக விசேட வைத்திய நிபுணர்களின் கருத்துக்களைப் கேட்டறிவதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று வியாழக்கிழமை விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக அரசாங்கம், பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை என்பவற்றினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இது வரையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் , அவர்களுடன் பழகிய குழுவினர் அவர்களுடன் பழகிய இரண்டாவது குழுவினர் உள்ளிட்டோர் இனங்காணப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது மிக முக்கியமானது என்று விசேட வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

இதன் போது வைரஸ் தொற்றினை இனங்காண்பதற்குரிய பரிசோதனைக் கருவிகள் போதியளவு இருக்கின்ற போதிலும் அனைத்து சந்தர்ப்பத்திலும் எவ்வித நிலைவரத்துக்கும் முகங்கொடுக்கும் வகையில் தேவையானவற்றை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஏனைய நாடுகளுக்கு அப்பால் வைரஸ் பரலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்த தனிமைப்படுத்தல் வேலைத்திட்டங்களுக்கு விசேட வைத்திய நிபுணர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். அந்த தனிமைப்படுத்தல் செயற்திட்டங்களை மேலும் வலுப்படுத்துவதானது வைரஸ் பரவலைக் கட்டுப்டுத்துவதற்கான முக்கிய காரணியாகும் என்றும் இதன் போது வைத்திய நிபுணர்கள் எடுத்துரைத்தனர்.

இது வரையில் வைரஸ் பரவல் இனங்காணப்படாத பிரதேசங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவமும் இதன் போது வைத்திய நிபுணர்களால் கூடுதல் கவனத்திற்கு உட்படுத்தப்பட்டது. அந்த பிரதேசங்களுக்கு வைரஸ் பரவல் இனங்காணப்பட்ட பகுதிகளிலிருந்து பயணம் செய்வது முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என்பது வைத்திய நிபுணர்களின் நிலைப்பாடாகக் காணப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் வீட்டில் இருப்பதே மிக முக்கியமானதாகும் என்பதையும் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தினர். அத்தோடு வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது முகக்கவசங்களை அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் என்வற்றின் முக்கியத்துவமும் இதன் போது எடுத்துக்காட்டப்பட்டது.

வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழகம் , தொழிநுட்ப நிறுவனங்கள் இணைந்த குழு கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. அவற்றை விரைவில் சோதனை செய்வது பற்றியும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரை பற்றியும் அவர்களை துரிதமாக குணப்படுத்துவது தொடர்பிலும் இதன் போது ஜனாதிபதி கேள்வியெழுப்பினார்.

அவர்களுக்கான சிகிச்சைகள் தொடர்ந்தும் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் , அதற்கான மருந்துகள் வழங்கப்படுவதாகவும் வைத்திய நிபுணர்களால் தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலீடு, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதை பிரதிநிதித்துவப்படுத்தும்...

2024-12-13 02:13:40
news-image

உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம்...

2024-12-13 01:02:13
news-image

'கோட்டாபய - பகுதி 2'ஆக மாறிவிட்டாரா...

2024-12-12 17:28:10
news-image

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள...

2024-12-12 21:13:18
news-image

விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்வனவு செய்ய...

2024-12-12 17:20:39
news-image

சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி...

2024-12-12 21:12:41
news-image

சபாநாயகரின் “கலாநிதி” பட்டம் தொடர்பான சர்ச்சை...

2024-12-12 17:06:16
news-image

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு...

2024-12-12 21:15:23
news-image

கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை :...

2024-12-12 17:04:17
news-image

உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம்...

2024-12-12 19:27:14
news-image

மக்களுக்கிடையிலான இராஜதந்திரத்தின் உதாரணமாக அமைதிப்படை நிகழ்ச்சித்திட்டம்...

2024-12-12 19:23:22
news-image

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு...

2024-12-12 18:11:27