மட்டு, வவுணதீவில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை !

09 Apr, 2020 | 08:15 PM
image

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் நடாத்திச்செல்லப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையங்களை பொலிஸார்  முற்றுகையிட்டுள்ளனர்.

இதன் போது ஒரு தொகுதி கசிப்பு கொள்கலன்களும், மோட்டார் சைக்கிள்கள், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா, கரையாக்கந்தீவு, காந்துநகர், காஞ்சிரங்குடா, பனையறுப்பான், பாவற்கொடிச்சேனை போன்ற கிராமங்களில் நேற்று இரவு, மற்றும் இன்று வியாழக்கிழமை  காலை இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுணதீவு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக கிராம உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் மேற்படி கசிப்பு நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதுடன் அதனுடன் தொடர்புப்பட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸாரின் நடவடிக்கையை மேற்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் பார்வையிட்டதுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்ட அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.

வவுணதீவு பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில்  இதுவரை வடிசாராயம் மற்றும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 17  நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58