இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் பல்வேறு காரணங்களால் ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனை கண்டறிய தற்போது நவீன பரிசோதனைகள் அறிமுகமாகியிருக்கிறது.

எம்மில் பலருக்கு உணவு வகைகள், நறுமணம், சுற்றுப்புற சூழலியல் காரணிகள் என பல்வேறு வகையான விடயங்களால் ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி ஏற்படுகிறது. இதனை கண்டறிய பொதுவாக ரத்த பரிசோதனையும், தோல் பரிசோதனையும் மேற்கொள்வார்கள்.

ஒஸ்துமா பாதிப்பிற்கான அறிகுறிகள் தெரிந்தாலும் முதலில் ஒவ்வாமைக்கான பரிசோதனைகளையும் மேற்கொள்வார்கள். சிலருக்கு ஸ்கின் பிரிக் டெஸ்ட் Skin Prick Test எனப்படும் பரிசோதனையை மேற்கொள்வார்கள். 

இத்தகைய பரிசோதனையின் போது குறிப்பிட்ட பகுதியில் ஊசி மூலம் பிரத்யேக மருந்தை செலுத்துவார்கள். அந்தப்பகுதி சில நிமிடங்களில் சிவந்து காணப்பட்டாலோ அல்லது அசௌகரியமான நிலை ஏற்பட்டாலோ அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவார்கள். 

சிலருக்கு இதன் மூலமும் ஒவ்வாமை உறுதி செய்யப்படாவிட்டால் அவர்களுக்கு மருத்துவர்கள் intra dermal test என்ற பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். இந்த பரிசோதனை மூலம் உணவின் மூலம் அல்லாத ஒவ்வாமையை துல்லியமாக கண்டறிய இயலும்.

இதன்பிறகு சிலருக்கு பிரத்தியேகமாக பேட்ச் டெஸ்ட் Patch Test என்ற பரிசோதனையை மேற்கொள்வார்கள்.

அதன்பிறகு சிலருக்கு ஒவ்வாமையான பிரத்யேக ரத்த பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். இந்த பரிசோதனையின் போது எலிசா (enzyme -linked immunosorbent assay) மற்றும் ராஸ்ட் ( radioallergosotbent test) என்ற சோதனையை மேற்கொண்டு ஒவ்வாமைக்கான மூல காரணத்தை கண்டறிவார்கள். அதன் பிறகு அதற்குரிய தொடர்ச்சியான சிகிச்சை மற்றும் வாழ்க்கை நடைமுறையில் சில மாற்றங்களை தொடர்ந்து மேற்கொள்ளும் பொழுது, இதிலிருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம்.. அத்துடன் சிலருக்கு இதன் காரணமாகவும் ஒஸ்துமா பாதிப்பு ஏற்படக்கூடும். அதற்கும் பிரத்யேக சிகிச்சை மூலம் குணம் பெற முடியும்.